தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ் மொழி புறக்கணிப்பு : ஸ்டாலின் கண்டனம்!!

Author: Babu
7 October 2020, 2:13 pm
Stalin 02 updatenews360
Quick Share

தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில் தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெர்வித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவின் பாரம்பரியமான பன்முகத்தன்மையைப் பாழ்படுத்தி, ஒருமைப்பாட்டினை உருக்குலைப்பது ஒன்றையே மத்திய பாஜக அரசு கொள்கையாகக் கொண்டிருக்கிறது. இந்தியக் கலாச்சாரம் பற்றி ஆய்வு செய்ய அமைத்த 16 பேர் குழுவில் தமிழர்கள் உள்ளிட்ட தென்னகத்தினர், சிறுபான்மையினர், பட்டியலினத்தவரைப் புறக்கணித்தார்கள். கண்டித்தோம்.

தற்போது, மத்திய அரசின் தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிக்கையில், தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவின் தொல்லியல் சான்றுகளில் அறுபது சதவீதத்திற்கும் மேலான சான்றுகளைக் கொண்டு விளங்கும் தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது, தமிழ் மொழியின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பாகும்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக மண்ணின் மைந்தர்களுக்கான வேலைவாய்ப்புகள் அருகி வருகிறது. ரயில்வே மற்றும் மின்வாரியப் பணிகள், ஊட்டி ஆயுதத் தொழிற்சாலை பணியிடத்துக்கான தேர்வு உள்ளிட்டவற்றில், தமிழ் தெரியாத வடமாநிலத்தவர் அதிகமாக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பான வழக்கில் நீதிபதிகள் அதிருப்திக் குரலை வெளிப்படுத்தியுள்ளனர்.

மத்திய அரசின் இந்தித் திணிப்பு மற்றும் தமிழர் நலன் புறக்கணிப்புக்குத் துணை போகும் அடிமை அதிமுக ஆட்சியின் அவலங்களையும் அம்பலப்படுத்துவோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 59

0

0