சுற்றுலா பயணிகளே ரெடியா? மலைகளின் இளவரசியில் மலர்க்கண்காட்சி : கோடை விழாவுக்கு தயாராகும் கொடைக்கானல்…!!!

Author: Udayachandran RadhaKrishnan
3 May 2022, 5:53 pm
Kodaikanal Flower Show -Updatenews360
Quick Share

கொடைக்கானல் : மனதை மயக்கும் மலர்களைக் கொண்டு மலர் கண்காட்சிக்கு பிரையண்ட் பூங்கா தயாராகி வருகிறது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு கோடைகாலம் ஆரம்பித்ததிலிருந்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.

மேலும் இந்த கோடை சீசனில் முக்கிய பங்கு வகிப்பது கோடைவிழா கோடை விழாவின் முக்கிய பங்காக இருக்கக்கூடியது மலர் கண்காட்சி.

இந்த மலர் கண்காட்சிக்காக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பலவகையான மலர்கள் நடவு செய்யப்பட்டு தற்போது அந்த மலர்கள் பூக்கத் தொடங்கி இருக்கிறது.

குறிப்பாக ரோஜா வகையான மலர்கள், மேரி கோல்ட், ஜெர்ரி புறா உள்ளிட்ட பலவகையான மலர்கள் தற்போது பூத்து குலுங்க துவங்கியிருக்கிறது.

மேலும் மலர் கண்காட்சி தேதி அறிவிப்பதற்காக பலரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். குளு குளு காலநிலையும் மனதை மயக்கும் மலர்கள் கொண்டு மலர் கண்காட்சிக்கு கோடை விழாவிற்கும் தயாராகி வருகிறாள் மலைகளின் இளவரசி.

Views: - 833

0

0