எங்களை பார்த்து பாமகவுக்கு பயமா? தோல்வி பயத்துல ஏன் பம்மறீங்க : சீறும் திமுக அமைச்சர்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 5:56 pm

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து சேலம் கோவிந்தராஜ் தலைமை கழக பேச்சாளர் அகத்தியர் ஆன்மா என்ற தலைப்பில் அகத்தியர் வேஷம் இட்டு பனையபுரம் காலனி பகுதிகளில் வீதியில் நடந்து சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்,

இவருடன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட ஐ என் டி ஐ ஏ கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி எங்களைப் பொறுத்தவரை 10.5% இட ஒதுக்கீடை சட்ட உரிமையோடு பெற்று தர வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் நோக்கம் எங்கும் தடைபட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் சட்ட உரிமையோடு இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்,.

மத்திய 2021 ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுத்திருக்க வேண்டும் அவர்கள் எடுக்கவில்லை, இடைத்தேர்தல் என்றாலே மாவட்ட செயலாளர்கள் அமைச்சர்கள் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்கு உரிமை உண்டு, அதன் அடிப்படையில் நாங்கள் தேர்தல் பணியாற்றி வருகிறோம்,

எந்த தேர்தல் எடுத்துக் கொண்டாலும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் தேர்தல் பணியாற்றுவார்கள் அதனை புறக்கணிக்க மாட்டார்கள் பாட்டாளி மக்கள் கட்சியினர் வடமாநிலத்தில் இருந்து பலரையும் கொண்டு வந்து இந்த தொகுதியில் குவித்து வைத்துள்ளனர்,

அதை நாங்கள் யாரும் குற்றம் என்று சொல்லவில்லை, எங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் ஆள் இருக்கிறார்கள் அதனால் வருகிறார்கள், நாங்கள் குவிந்துள்ளோம் என கூறுவது தோல்விக்கான காரணத்தை இப்போதே தேடியிருக்கிரார்கள் என கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!