வெளிநாட்டினர் – உள்ளூர் வாசிகளுக்கு இடையே வாக்குவாதம்.. மோதல் ஏற்படும் சூழல் : ஆரோவில்லில் பதற்றம்.. போலீசார் குவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2022, 6:47 pm

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில் வெளிநாட்டினருக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழலால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில். இங்கு பல்வேறு நாட்டில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் வசித்து வருகின்றனர்.

இங்கு ஆரோவில் ஃபவுண்டேஷன் சொந்தமாக பல நூறு ஏக்கர் பரப்பளவு நிலம் உள்ளது. மேலும் அதன் அருகிலும் பல ஏக்கர்கள் தரிசு நிலம் தனியாருக்கு சொந்தமாக வும் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி இரண்டு ஏக்கர் நிலம் வாங்கினார்.

அந்த இடம் ஆரோவிலுக்கு சொந்தம் என சில ஆரோவில் உள்ள வெளிநாட்டினர் கூறி வந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது.

உடனே போலீசார் சென்று அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மேலும் வெளிநாட்டினர் ஆரோவில் வாசிகள் நீதிமன்றத்திற்கு சென்று தடை வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆரோவில் போதிய ஆதராம் இல்லாததால் மனுவை தள்ளுபடி செய்தார். இந்நிலையில் இன்று தனியாருக்கு சொந்தமான இடம் என அவரது தரப்பினர் வேலி அமைக்க முற்பட்ட போது 100 மேற்பட்ட வெளிநாட்டினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.

இதனால் தனியார் இட உரிமையாளர் தரப்புக்கும் ஆரோவில் வாசிகளுக்கு தள்ளு முள்ளு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனால் ஆரோவில் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது பதற்றத்தை தணிக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!