மதமாற்றத்திற்கு தொந்தரவு செய்ததால் மாணவி தற்கொலை : கிறிஸ்துவ பள்ளிக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்டம்
Author: Babu Lakshmanan20 January 2022, 4:47 pm
அரியலூர் : மதமாற்றம் செய்யுமாறு தொந்தரவு செய்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பத்திற்க காரணமாக கிறிஸ்துவ பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக ஆர்ப்பாட்டம் செய்தது.
அரியலூர் மாவட்டம் வடுக பாளையம் கிராமத்தில் வசித்து வரும் முருகானந்தம் கனிமொழி தம்பதிக்கு 17 வயது மகள் ஒருவர் இருந்தார். இவர் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தூய இருதய மேல்நிலை பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி விடுதியில் தங்கி வகுப்புக்குச் சென்று வந்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 482 மதிப்பெண் பெற்ற மாணவி படிப்பில் சிறந்து விளங்கியுள்ளார். இவரின் குடும்ப வறுமையை பயன்படுத்தி கொண்ட பள்ளி நிர்வாகம் மதம் மாற கோரி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், படிக்க விடாமல் பள்ளியை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி கடந்த 9ஆம் தேதி விடுதி காப்பாளர் சகாயமேரி அறையிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்து தண்ணீரில் கரைத்து குடித்து மயக்கம் அடைந்துள்ளார். பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோரிடம் உங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி வரவழைத்து அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து மாணவியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சையின்போது அவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வீடியோவாக பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோ அனைத்து வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இரவு உயிரிழந்தார். இதனை அடுத்து பள்ளியின் விடுதி காப்பாளர் சகாயமேரி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு காரணமான கிறிஸ்துவ அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதத்தை வைத்து அரசியல் செய்ய கூடாது எனக்கூறி இந்திய மாணவர் சங்கத்தினர், அதே இடத்தில் இந்து அமைப்புகளுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் இந்திய மாணவர் சங்கத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்
0
0