வீட்டுக்குள் புகுந்து பெண் வெட்டிப் படுகொலை.. விசாரணையில் சிக்கிய ராணுவ வீரர் : திக் திக் சம்பவம்!
Author: Udayachandran RadhaKrishnan22 July 2025, 10:57 am
வீட்டுக்குள் புகுந்து பெண் வெட்டிப் படுகொலை செய்யயப்பட்ட சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்த நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத் சேர்ந்தவர் விஜயகோபால். எல்லை பாதுகாப்பு துணை ராணுவ வீரராக உத்தராகண்டில் பணியாற்றி வருகிறார்.
இவருக்கு தூத்துக்குடி மணப்பாடு பகுதியை சேர்ந்த ஜெர்மின் என்ற மனைவி உள்ளார். 15 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆன நிலையில், 14 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் 5 வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி இரவு குழந்தைகளுடன் வசித்து வந்த ஜெர்மினை மர்மநபர்கள் இருவர் வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்தனர்.
இது குறித்து ஜெர்மின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவருடைய கணவர் விஜயகோபால் தான் காரணம் என குற்றம்சாட்டினார்.
இதையடுத்த விஜய கோபாலிடம் போலீசார் விசாரணை செய்த போது பல அதிர்ச்சி தகவல் வெளியாகின. குழந்தை பெற்ற பிறகே ஜெர்மின் நடவடிக்கை மாறியது. பலருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார்.

அவருடைய பெயரில் நான் கட்டிய வீட்டை அபகரித்து விட்டார். ற்போது நான் விவாகரத்துக்காக நீதிமன்றம் படியேறி வருகிறேன். மாதம் 17 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் ட்டுள்ளார். ஆனால் பல ஆண்களுடன் அவருக்கு தகாத உறவு உள்ளது.
இதனால் என் குடும்பத்துக்கு தான் அவமானம். இதன் காரணமாகவே கூலிப்படையை ஏவி நான் கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தொடர்புடைய விஜய கோபலின் தந்தையையும் கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
