வழக்கறிஞர் வாஞ்சிநாதனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யுங்க.. அர்ஜூன் சம்பத் கோரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
29 July 2025, 5:55 pm

திருவள்ளூர் மாவட்டம் புழல் சிறையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பாஜக நிர்வாகி கே ஆர் வெங்கடேசன் மற்றும் வின் டிவி உரிமையாளர் தேவநாதன் யாதவ் இருவரை சிறையில் சந்தித்து பேசி ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக பாஜகவை ஆதரித்து திருத்தணியில் தொடங்கி தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வெல்லும் தமிழகம் இந்து மக்கள் கட்சி சார்பில் கொள்கை பிரச்சார யாத்திரை நடைபெற உள்ளதாக கூறினார்.

ஆன்மீகவாதிகள் இந்துக்கள் 100% வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக திருத்தணியில் துவங்கிய இந்த யாத்திரைக்கு அதிக அளவில் ஆதரவு இருந்ததாகவும் சென்னையில் யாத்திரையை தடை செய்து அனுமதி மறுத்துள்ளது.

வெல்லும் தமிழகம் யாத்திரையில் கலந்து கொள்பவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளது. ஜனநாயகத்தை திராவிட மாடல் அரசாங்கம் சீர்குலைத்து வருகிறது என்றும் இதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதாக கூறினார்.

மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் குறித்து அவதூறு பேசி வருகின்றனர். வழக்கறிஞர் வாஞ்சிநாதன் நீதிமன்றத்தை ஜாதி துறையாக மாற்ற முயற்சி செய்கிறார்.

இந்துக்களுக்கு எதிராகவும் பிராமணருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துருவும் ஹரி பரந்தாமன் செய்து கொண்டிருக்கிறார்கள்.

வாஞ்சிநாதனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சனிக்கிழமை இந்து மக்கள் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

இன்றும் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளை வருவாய் துறை அதிகாரிகளை தேர்தல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தும் உத்தியாக உள்ளது.

கட்சி பிரச்சாரம் செய்வது ஜனநாயக விரோதமானது‌. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.

விநாயகர் சதுர்த்தி விழாக்கள் தமிழகத்தில் வழக்கம் போல் இந்து‌ ஒற்றுமை விழாவாக
ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி விழாவாக நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை. நடத்த அரசு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்.

மக்களைக் காப்போம் தமிழகம் மீட்போம் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் யாத்திரைக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளதால் திமுக கூட்டணியினர் பயந்து போய் உள்ளனர்.

திமுக கூட்டணி அரசு என்பதை பண பலத்தையும் அதிகார பலத்தையும் பயன்படுத்தி அவதூறு பரப்பி வெற்றி பெற துடிக்கிறார்கள் அதை தமிழக மக்கள் முறியடிப்பார்கள்.

ஆரம்பாக்கம் சிறுமி விவகாரத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது விரைவில் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தண்டனை பெற்றுக் கொடுத்ததை போன்று குற்றவாளிக்கு தண்டனை பெற்று தரவேண்டும்.

சிறுமி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், நீதிமன்றம் அறிவித்ததன் பேரிலேயே அஜித்குமார் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு 25 லட்சம் வழங்கியது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக சென்று கொண்டிருக்கிற காவல்துறை எஸ் ஐ ஏ கழிவறையில் ஓடி ஒளிகிறார்.

பாதுகாப்பற்ற சூழல் காவல்துறைக்கு நிலவுகிறது இந்த விஷயத்தில் நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல் துறைக்கு பொறுப்பு முதல்வர்தான் என அவர் தெரிவித்தார்

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!