‘அரியர் மாணவர்களின் அன்பு மழையில் நனையும் முதல்வர் பழனிசாமி ‘ – நாகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு..!

6 September 2020, 1:51 pm
Quick Share

நாகை மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமியை பாராட்டி அரியர் மாணவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அறிவித்த நாள் முதல் பள்ளி, கல்லூரி என கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த சூழலில் 10 மற்றும் 11 ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்த கேள்வி எழுந்தது. மாணவர்கள் தேர்வு எழுத வரமுடியாத சூழல் நிலவியது இதன் காரணமாக மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

இந்த செய்தியை கேட்டு, வயிற்றில் பாலை வார்த்த “எங்கள் தெய்வமே” என முதலமைச்சர் பழனிசாமிக்கு மாணவர்கள் தீபாராதனை காண்பித்து நன்றி செலுத்தினர். இந்த சூழலில் தேர்வு எழுத பதிவு செய்திருந்த அரியர் வைத்த மாணவர்கள் ஆல் பாஸ் என சமீபத்தில் மீண்டும் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர்.

இந்த அறிவிப்பை கேட்டு ஆனந்த அதிர்ச்சியுற்ற அரியர் மாணவர்கள், முதலமைச்சர் பழனிசாமியை பாராட்டியும், நன்றி தெரிவித்தும் தொடர்ந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஈரோடு, மதுரை என பல்வேறு மாவட்டங்களில் முதலமைச்சரை பாராட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்த சூழலில், நாகை முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வாழ்த்தி மீண்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரில் வரம் தந்த கடவுளே, எங்கள் வசந்தத்தின் விடியலே, வணங்குகிறோம் தலைவா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. போஸ்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோட், பேண்ட் அணிந்துள்ளார். போஸ்டரில் அரியர் பாய்ஸ் மற்றும் அரியர்சை வீட்டில் மறைத்த மாணவர்கள், நாகப்பட்டினம் என்று உள்ளது. போஸ்டரில் 8 பேரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது.

Views: - 0

0

0