இன்று கடலில் கரைக்கப்படும் விவேக்கின் அஸ்தி: நடிகர் மயில்சாமி தகவல்..!!

18 April 2021, 11:08 am
vivek-updatenews360
Quick Share

சென்னை: மறைந்த நடிகர் விவேக்கின் அஸ்தி இன்று கடலில் கரைக்கப்படும் என நடிகர் மயில்சாமி தெரிவித்துள்ளார்.

விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விவேக் இல்லத்தில் செய்தியாளரிடம் பேசிய நடிகர் மயில்சாமி , நடிகர் விவேக்கின் அஸ்தி இன்று கடலில் கரைக்கப்படும் என தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய நடிகர் மயில்சாமி, தேர்தல் பிரச்சாரத்தின்போது வாக்குகளுக்காக வீடு வீடாய் செல்வதைப்போல மரம் நட கோரியும் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வோம். நடிகர் விவேக்கின் கனவை நனவாக்கும் வகையில் தொடர்ந்து மரங்களை நடுவோம் என கூறினார். நடிகர் விவேக்கின் அஸ்தி இன்று வாங்கப்பட்டு கடற்கரையில் கொண்டு சென்று கடலில் கரைக்கப்படும் என மயில்சாமி தெரிவித்தார்.

நடிகர் விவேக் எங்களுடன்தான் இருக்கிறார். அவர் விட்டுச் சென்ற பணிகளை நாங்கள் தொடர்வோம் என்று நடிகர் தாமு கூறினார்.

Views: - 40

0

0