கொஞ்சம் தொகுதி பக்கம் வரச் சொலுங்க.. கார்த்தி சிதம்பரத்தின் மனைவியிடம் திமுக மகளிரணி கோரிக்கை!

Author: Udayachandran RadhaKrishnan
2 April 2024, 6:20 pm
Karti
Quick Share

கொஞ்சம் தொகுதி பக்கம் வரச் சொலுங்க.. கார்த்தி சிதம்பரத்தின் மனைவியிடம் திமுக மகளிரணி கோரிக்கை!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதி சிவகங்கை பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்டு தேர்தலைச் சந்திக்கிறது.

இங்கு திமுக கூட்டணியின் வேட்பாளராக சிட்டிங்க் எம்பி கார்த்தி சிதம்பரமே மீண்டும் போட்டியிடுகிறார்.

இன்று ஆலங்குடியில் நடைபெற்ற திமுக மகளிர் அணியினர் கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி மக்களிடம் விரைவாக வாக்கு சேகரிப்பது எப்படி என்று மகளிர் அணிக்குத்தான் தெரியும் என்றார்.

தேர்தல் தொடர்பாக கருத்துகளை கேட்ட ஸ்ரீநிதியிடம், எம்பியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால் எம்பியை மாதம் ஒரோ முறையாவது ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கு வரச் சொல்லுங்கள் எனவும், வாக்குச் சேகரிக்கச் செல்லும் போது பொதுமக்கள் கேள்வி கேட்பதாகவும் குறைகளை திமுக மகளிர் அணியினர் தெரிவித்தனர்.

இனிமேல் கட்டாயமாக எம்பி மாதம் ஒரு முறை தொகுதிக்கு வருவார் என தான் உறுதி அளிப்பதாக ஸ்ரீநிதி கூறியதை அடுத்து மகளிர் அணியினர் சமாதானம் அடைந்தனர்.

Views: - 215

0

0