மாஸ்டர் படத்தில் வந்த உயர் ரக பூனை திருட்டு : வைரலான சிசிடிவி காட்சியால் 2 நாட்கள் கழித்து பூனையை விட்டு சென்ற ஆசாமிகள்

Author: kavin kumar
21 February 2022, 1:00 pm
Quick Share

புதுச்சேரி : புதுச்சேரியில் செல்லப்பிராணிகள் கடையில் இருந்து மாஸ்டர் படத்தில் வந்த உயர் ரக பூனை போன்ற பூனை குட்டியை மர்ம நபர்கள் திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் மீண்டும் பூனையை கடையில் விட்டு சென்றனர்.

புதுச்சேரி, முத்தியால்பேட்டை பகுதியில் ஜெயக்குமார் என்பவர் செல்லப்பிரணிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இதனிடையே கடந்த 3 ஆண்டுகளாய் உயர் ரக பூனை ஒன்றை அவர் வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 18 ம் தேதி அவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் 3 பேர் அங்கு வளர்க்கப்படும் புறா, வண்ண மீன்கள், பூனையின் விலை கேட்ட அவர்கள் கடையின் உரிமையாளரின் கவனத்தை திசை திருப்பி பூனையை தூக்கி கொண்டு மூவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
இந்த சிசிடிவி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவியதை அடுத்து அதனை திருடி சென்றவர்கள் மீண்டும் கடைக்கு அருகே அந்த பூனைய விட்டுவிட்டு சென்றுள்ளனர்.

Views: - 828

0

0