மகனின் பிறந்தநாளுக்கு கேக் வாங்க சென்ற பா.ஜ.க. பிரமுகர்! ஓட ஓட வெட்டிப் படுகொலை!!

16 September 2020, 3:47 pm
BJP Murder - updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : கெலமங்கலத்தில் பா.ஜ.க இளைஞரணி தலைவர் மர்மநபர்களால், கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் கெலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன் (வயது 35). இவர் தனியார்ப்பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அதிமுக கட்சியில் இருந்து கடந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் ஊராட்சி குழு உறுப்பினராக போட்டியிட்டார்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிமுகவில் இருந்து பா.ஜ.க.வில் இணைந்த இவருக்கு ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று ரங்கநாதன் தனது மகனின் பிறந்தநாளுக்காக கேக் வாங்கி வருவதாக கூறி வெளியே சென்றார்.

இந்த நிலையில் ரங்கநாதன் கேக் வாங்கி திரும்பிய போது, ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். சம்பவ இடத்திலேயே துடித்துடித்து ரங்கநாதன் உயிரிழந்தார். தகவல் அறிந்த கெலமங்கலம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து, உடலை கைபற்றி உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

கொலையாளிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் போலீசார் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். பாஜக – பிரமுகர் கொலை செய்யபட்ட சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0