ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த அஸ்வின்.. இதெல்லாம் உங்களுக்குகே ஓவரா தெரியலயா.?

Author: Rajesh
9 May 2022, 7:40 am
Quick Share

விஜய் டிவியில் ரெட்டைவால் குருவி தொடரின் மூலம் அறிமுகி அதன்பிறகு சில படங்களிலும், ஆல்பம் சாங்களிலும் நடித்தவர் தான் அஸ்வின். ஆனால் அஸ்வினுக்கு பெரிய அளவில் எங்கும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. எனவே மீண்டும் விஜய் டிவிக்கு வந்து குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கிடைத்த வரவேற்பால் அஸ்வினுக்கு படவாய்ப்பு வரத்தொடங்கியது.

அஸ்வின் நடித்த “என்ன சொல்ல போகிறாய்” படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது இதுவரை 40க்கும் மேற்பட்ட கதைகள் கேட்டுள்ளேன், கதை கேட்கும் போதே பிடிக்கவில்லையென்றால் தூங்கி விடுவேன் என்ற அஸ்வினின் ஆணவப் பேச்சுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து அவரை ரசிகர்கள் இணையத்தில் வறுத்தெடுத்தனர்.

என்ன சொல்லப் போகிறாய் படத்தின் தோல்விக்கு அஸ்வினுடைய ஆணவப் பேச்சு தான் காரணம் என படக்குழு, சினிமா வட்டாரத்தில் அப்போது பேச்சுக்கள் அடிப்பட்டது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், லைப்ல என்னைக்குமே ஆசப்படுங்க ஆனா பேராசை மட்டும் படாதீங்க என தெரிவித்துள்ளார். இவரை பற்றிய செய்திகள் எது வெளியானாலும் உடனடியாக இணையத்தில் பரப்பி விடுவார்கள் நெட்டிசன்கள். இ;போது, அட்வைஸ் செய்தததையும் நெட்டிசன்கள் ‘இதெல்லாம் உங்களுக்கே ஓவரா தெரியலயா. என கிண்டல் அடித்து வருகின்றனர்.

Views: - 525

0

2