அட்லீ-விஜய் இணையும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் புதிய படம் இத்தனை கோடி பட்ஜெட்டில் தயாராகிறதா?

Author: Vignesh
26 September 2022, 1:38 pm

சினிமாவில் சிறந்த கூட்டணியாக ரசிகர்கள் பார்க்கும் சிலர் இருக்கிறார்கள். அப்படி தமிழ் சினிமாவில் இயக்குனர்-நடிகர் என கொண்டாடப்படும் வெற்றி கூட்டணியில் விஜய்-அட்லீ இடம்பெறுகிறார்கள்.

இவர்களது கூட்டணியில் வந்த தெறி, மெர்சல், பிகில் என 3 பிளாக் பஸ்டர் படங்கள் வெளியாகிவிட்டன. அடுத்து இவர்கள் எப்போது கூட்டணி அமைப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடம் உள்ளது. விஜய்யோ தெலுங்கு இயக்குனருடன் கூட்டணி அமைத்து இப்போது வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அட்லீ பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்குகிறார். அட்லீ படங்கள் எல்லாமே கொஞ்சம் கிளாஸாக இருக்கும், அப்படி படம் எடுக்க பட்ஜெட்டும் உயர தான் செய்யும். இப்போது அட்லீ-விஜய் இணையப்போகும் புதிய படம் குறித்து ஓரு தகவல். அது என்னவென்றால் இந்த புதிய படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தான் தயாரிக்க இருக்கிறார்களாம். அதுவும் பட்ஜெட் ரூ.300 கோடி என்கின்றனர்.

  • The heir actor who divorced the actress has decided 10 வருடமாக குழந்தை இல்லாததால் புலம்பும் வாரிசு நடிகர்.. நடிகையை பிரிய முடிவு!