மளிகை கடையில் புகுந்து வயதான தம்பதி மீது தாக்குதல் : சிக்கிய பாஜக பிரமுகர்..அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
29 March 2022, 4:26 pm
Bjp Executive Attack Old couples-Updatenews360
Quick Share

புதுச்சேரி : வயதான தம்பதியினரை பாஜக பிரமுகர் கூட்டாளிகளுடன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியில் மனைவுயுடன் மளிகை கடை நடத்தி வருபவர் குமரேசன்(வயது 65). இவரது இரண்டாவது மகன் கணேஷ்குமார் செய்து வந்த தொழிலில் நஷ்டம் அடைந்தால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவர் கருவடிக்குப்பத்தில் சேர்ந்த பா.ஜ.க பிரமுகர் பிரகாஷ் என்பவரிடம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை அவ்வப்போது பிரகாஷ் கேட்டு வந்துள்ளார். ஆனால் பணம் இல்லாத காரணத்தினால் குமரேசன் அவகாசம் கோரி வந்த நிலையில் நேற்று இரவு பிரகாஷ் குமார் உட்பட 3 பேர் கடைக்கு சென்று குமரேசனை மற்றும் அவரது மனைவியிடம் கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை என்றால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அவர்களை தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவானதை அடுத்து, பா.ஜ.க பிரமுகர் தம்பதியினரை தாக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது, மேலும் இது குறித்து லாஸ்பேட்டை போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 1053

0

0