டாஸ்மாக் கடையில் தகராறு…காவலரின் மண்டையை உடைத்த திமுக நிர்வாகி: தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!!

Author: Aarthi Sivakumar
23 October 2021, 3:50 pm
Quick Share

விருதுநகர்: ஆயுதப்படை காவலருக்கும் திமுகவை சேர்ந்த பார் உரிமையாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட அடிதடியில் காவலரின் மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஆண்மைபெருக்கி கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் விருதுநகர் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் காரியாபட்டியில் உள்ள பார் ஒன்றில் பணி முடிந்த பின்பு மது அருந்த சென்றுள்ளார்.

அங்கு இருந்த காரியாபட்டி திமுக நகர துணை செயலாளரும், பார் உரிமையாளருமான கல்யாணி மணிமாறனை தரக்குறைவாக பேசி தாக்கிய அடித்ததாகவும் இதனால் மண்டை உடைந்தாகவும் கூறி ஆயுதப்படை காவலர் காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதேபோல் பார் உரிமையாளர் கல்யாணி காவலர் மணிமாறன் மதுபோதையில் பாரில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கல்யாணியை தாக்கியதன் காரணமாக ஆத்திரத்தில் உடனிருந்தவர்கள் மணிமாறனை தாக்கியதாக கூறி கல்யாணி தரப்பினர் மற்றொரு புகாரையும் காரியாபட்டி காவல் நிலையத்தில் அளித்துள்ளனர்.

மண்டை உடைக்கப்பட்ட காவலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பார் உரிமையாளர் கல்யாணி தலைமறைவாகியுள்ளார். மேலும் பாரில் பணிபுரிந்து வந்த முத்துசாமி மற்றும் மணி ஆகிய இருவரையும் காரியாபட்டி காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவாக இருக்கும் பார் உரிமையாளர் கல்யாணியை தேடி வருகின்றனர். கொரோனா தடை காலத்தில் பார்கள் இயங்க அரசு அனுமதிக்காத நிலையில் ஆளும் கட்சி நிர்வாகி பார் நடத்தி இருப்பதும் ஆயுதப்படை காவலர் சட்டவிரோதமாக இயங்கிய பாரில் மது அருந்த சென்று மண்டை உடைக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Views: - 356

0

0