திருப்பூரில் தடையை மீறி குட்கா விற்பனை செய்ய முயற்சி : 48 கிலோ குட்கா பறிமுதல்.. 3 பேர் கைது!!

14 July 2021, 12:41 pm
Gutka Seized Arrest- Updatenews360
Quick Share

திருப்பூர் : தடையை மீறி குட்காவை விற்பனை செய்ய முயற்சித்த 3 பேரை கைது செய்த போலீசார் 48 கிலோ குட்கா மற்றும் கார் ஒன்றை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் முழுவதும் மறைமுகமாக குட்காவை வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு பின்னர் சிறிய அளவிளான கடைகளில் மறைமுகமாக விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

இந்த நிலையில் திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் காரில் குட்கா கொண்டு செல்வதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் காவல் துறையினர் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

15 வேலம்பாளையம் பகுதியை கடக்க முயன்ற காரை சோதனை செய்ததில் காரில் சுமார் 48 கிலோ குட்கா இருந்துள்ளது. இதை கண்ட காவல்துறையினர் காரில் வந்த கணேஷ் பட்டேல் (வயது 25), ஜித்தேந்திரன் (வயது 20), பிக்காரம் (வயது 33) என மூவரையும் கைது செய்தனர்.

குட்கா கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். திருப்பூர் மாநகர காவல்துறை யை பொருத்தவரை இன்று வரை சுமார் 434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 2 ஆயிரம் கிலோ குட்கா பறிமுதல் செய்தும் இந்த அத்துமீறல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Views: - 236

0

0