ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி படுகொலை : சிசிடிவி காட்சியால் சிக்கிய 2 பேர்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 November 2021, 6:20 pm
Murder 2 Arrest - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : தென்பாகம் அருகே ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சி அடிப்படையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செல்சினி காலனியை சேர்ந்த கண்ணன் மகன் சாரதி (எ) பார்த்தசாரதி (வயது 35) என்பவரை அவரது வீட்டின் அருகில் நேற்று மர்ம நபர்கள் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த தென்பாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாரதி (எ) பார்த்தசாரதி என்பவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தூத்துக்குடி நகரம் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், முத்துகணேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து எதற்காக கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட எதிரிகளை உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் இறந்த சாரதி (எ) பார்த்த சாரதி என்பவருக்கும் செல்சினி காலனியைச் சேர்ந்த மூக்காண்டி மகன் மாரிமுத்து (வயது 26) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த முன்விரோதம் காரணமாக நேற்று மாரிமுத்து மற்றும் மாரிமுத்துவின் உறவினரான தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த ஆதிலிங்கம் மகன் கார்த்திக் (வயது 20) ஆகிய இருவரும் சேர்ந்து சாரதி (எ) பார்த்த சாரதியை அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து எதிரிகள் மாரிமுத்து (வயது 26) மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் மேற்படி தனிப்படையினர் இன்று :கைது செய்தனர். மேலும் தென்பாகம் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எதிரிகளை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார். இந்நிழ்வின் குற்றவாளி இருவர் போட்டோ & மற்றும் CCTV காட்சி உள்ளது.

Views: - 387

2

0