கூலித்தொழிலாளியை ஸ்குரூ டிரைவரால் குத்தி கொலை செய்த ஆட்டோ ஓட்டுநர் : குமரி அருகே பரபரப்பு!!

27 November 2020, 3:12 pm
Kanya Murder - Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : நாகர்கோவில் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஆட்டோ டிரைவர் ஸ்குரு டிரைவரால் குத்தி கூலி தொழிலாளியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பூதப்பாண்டி காவல் சரகத்திற்குட்பட்ட அருமநல்லூர் அருகே செக்கடி பகுதியை சேர்ந்த சிங் என்ற ஜெபசிங் (வயது 31). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் குழந்தை ஒன்று உள்ளது.

இவரும் பண்ணியோடு பகுதியைச் சார்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் இருவரும் நண்பர்கள். இருவருக்கும் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் காரணமாக, சேகர் – ஜெபசிங்கை அருமநல்லூர் பேருந்து நிறுத்தம் அருகே வைத்து ஸ்குரூ டிரைவரால் குத்தியுள்ளார்.

ஆட்டோ ஓட்டுநர் சேகர்

இதில் காயமடைந்த ஜெபசிங் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிந்தார். சேகர் என்பவர் ஊர்மக்களால் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த பூதப்பாண்டி தொடர்ந்து விசாரனை செய்து வருகின்றனர்.

Views: - 17

0

0