மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய ஆட்டோ ஓட்டுநர் : ரோந்து போலீசாரின் சோதனையின் போது கழுத்தை அறுத்து தற்கொலை…!!

12 July 2021, 4:09 pm
Youth Suicide- Updatenews360
Quick Share

சென்னை : மது அருந்திய வாகன ஓட்டிய ஆட்டோ ஓட்டுநரிடம் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் விசாரிக்க சென்ற போது மதுபாட்டிலால் கழுத்தறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்ததியுள்ளது.

சென்னை திருமுல்லைவாயில் அருகே அயப்பாக்கத்தில் பாக்கியராஜன் என்ற ஆட்டோ ஓட்டுநர் மது அருந்திக்கொண்டிருந்தார். அப்போது வாகன தணிக்கையின்போது ரோந்து வந்த போலீசார் பாக்கியராஜனை அழைத்து விசாரித்திருக்கின்றனர்.

விசாரித்துக் கொண்டிருக்கும்போதே பாட்டிலை உடைத்த பாக்கியராஜன் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார். இதனால், அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த திடீர் நிகழ்வால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டிருக்கின்றனர். ஆனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால் பாக்கியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தற்போது பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணைக்கு பயந்து ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Views: - 115

0

0