கஞ்சா புகைத்த வாலிபர்களை தட்டிக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் : நாட்டு வெடிகுண்டு வீசி தப்பியோட்டம்!!

Author: Udayachandran
12 October 2020, 4:14 pm
Pondy bomb- Updatenews360
Quick Share

புதுச்சேரி : வீட்டருகே கஞ்சா அடித்த வாலிபர்களை தட்டிக்கேட்ட ஆட்டோ டிரைவர் வீடு மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை அக்கா சாமி மடத்து வீதியை சேர்ந்தவர் ஆட்டோ ஒட்டுநரான ராஜா. இவரது வீட்டிற்கு அருகே உள்ள காலி இடத்தில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் தினமும் கஞ்சா அடித்து ரகளையில் ஈடுப்பட்டு வருவது வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் ராஜாவின் வீட்டருகே வாலிபர்கள் சிலர் கஞ்சா அடித்து கொண்டிருந்தனர். அப்போது ராஜா அவர்களை அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று கஞ்சா அடிக்குமாறு கூறியுள்ளார். இதனால் அந்த வாலிபர்கள் ஆட்டோ ஓட்டுனர் ராஜா உடன் சிறிது நேரம் வாக்குவாததில் ஈடுப்பட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில் நேற்று இரவு ராஜா அவர் வீட்டில் தன் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் உறங்கி கொண்டிருந்த போது திடீர் என பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. உடனே ராஜா தன் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்த போது தன் வீட்டின் வெளியே புகை மூட்டமாக காணப்பட்டு வீட்டின் வெளியே வைக்கப்பட்டிருந்த பானை மற்றும் அம்மி கல் ஆகியவை உடைந்து சிதறி இருந்துள்ளது.

இதனை அடுத்து உடனடியாக ராஜா முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று தன் வீட்டின் வாசலில் மர்ம நபர்கள் யாரோ நாட்டு வெடிகுண்டு வீசி சென்றதாக புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் மதியம் அப்பகுதியில் கஞ்சா அடித்து கொண்டிருந்த வாலிபர்களை ஆட்டோ ஓட்டுனர் ராஜா தட்டி கேட்டதால் அவர் வீட்டின் மீது அந்த வாலிபர்கள் நாட்டு வெடி குண்டு வீசி இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Views: - 59

0

0