களைகட்டி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு : ராகுல்காந்தி வருகையால் மூன்றடுக்கு பாதுகாப்பு!!

14 January 2021, 10:52 am
Avaniapuram Jallikattu- Updatenews360
Quick Share

மதுரை : களைகட்டி வரும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 7 வீரர்கள் காயமடைந்தனர்.

மதுரை அவனியாபுரத்தில் தை மாதம் முதல் தேதி பொங்கலான இன்று நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டிற்கு சுமார் 840 காளைகள் டோக்கன் வழங்கப்பட்டு 400 மாடுபிடி வீரர்களுக்கு மாடு பிடிக்க டோக்கன் வழங்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.


இதில் சிறப்பு விருந்தினராக காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல்காந்தி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மற்றும் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஜல்லிக்கட்டை காண மதியம் அளவில் கலந்து கொள்ள உள்ளனர்

இதில் 840 காளைகளின் உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் தொற்று இல்லை என்று மருத்துவ சான்று அளிக்கப்பட்டதை தொடர்ந்து 400 மாடு பிடி வீரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கும் நெகட்டிவ் வந்ததைத் தொடர்ந்து 12 சுற்றுகளாக ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறுகிறது.

தற்போது வரை 3 சுற்றுகள் நடந்து முடிந்துள்ளது. காளைகளை அடக்க முயன்ற 7 வீரர்களுக்கு காயம் ஏற்படுள்ளது. உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர் மற்றும் மாற்று உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது

இதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் சின்கா அவர்கள் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் மதுரை விமான நிலையத்திலிருந்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகமான பாதுகாப்பி போடப்பட்டுள்ளது.

Views: - 9

0

0