சிறந்த மருத்துவத்திற்கான விருது : தமிழகத்துக்கு பெருமை சேர்த்த கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர்!

Author: Udayachandran RadhaKrishnan
1 July 2024, 12:27 pm
EIS
Quick Share

சர்வதேச மருத்துவர்கள் தினத்தை ஒட்டி தமிழக சுகாதாரத்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு மருத்துவர்கள், சிறந்த மருத்துவமனைகள் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரவீந்திரன் சிறந்த மருத்துவதற்கான விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவர் கடந்த 2019 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மருத்துவக் கல்லூரி தொடங்கி 150 மருத்துவ இடங்கள் பெற காரணமாக இருந்தார். பின்னர் அவர் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனை முதல்வராக பணியாற்றி 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட கொரோனா நோயளிகளுக்கு சிகிச்சை அளிக்க உறுதுணையாக இருந்தார்.

அப்பொழுது அவருக்கு மத்திய அரசின் சிறந்த இ.எஸ்.ஐ மருத்துவமனை விருது கிடைத்தது. நாட்டிலே கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மட்டும் தான் பிரேதப் பரிசோதனை கூடம் அமைந்து உள்ளது.

இதுபோன்ற பல்வேறு வகைகளில் சிறப்பாக பணியாற்றியதால் முதல்வர் ரவீந்திரன் சிறந்த மருத்துவதற்கான விருதுக்கு தேர்வாகி உள்ளார். அவருக்கு இன்று சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.

  • Eps அரசியல் நாகரீகமே இல்லையா? அதிகார மமதையில் அராஜகம் : கேபி முனுசாமியை தடுத்த திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!
  • Views: - 227

    0

    0