போக்சோ வழக்குகள் குறித்து போலீசாருக்கு விழிப்புணர்வு : காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்பு!!

20 October 2020, 12:45 pm
POCSO Awareness - Updatenews360
Quick Share

கோவை: போக்சோ வழக்குகள் குறித்து கோவை மாவட்டம் மற்றும் மாநகர போலீசாருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை, போக்சோ (சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம்) வழக்கின் கீழ் கைது செய்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத்தரும் சட்டம் உள்ளது.

இந்த சூழலில், சட்டப்பிரிவு முழுமையாக பயன்படுத்துவது தொடர்பாக கோவை மாவட்ட மற்றும் மாநகர போலீசார் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று கோவை அவிநாசி சாலையில் உள்ள காவலர் சமுதாய கூடாத்தில் நடைபெற்றது.

இதில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ராதிகா கலந்துகொண்டு போலீசார் மத்தியில் சட்டப்பிரிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, கோவை மாநகர தலைமையக துணை ஆணையர் குணசேகரன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சுந்தர், அனைத்து பகுதி போலீசார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Views: - 43

0

0