உல்லாசத்தால் பிறந்த குழந்தை… ரூ.1.5 லட்சத்துக்கு விற்பனை : கூண்டோடு சிக்கிய கும்பல்!
Author: Udayachandran RadhaKrishnan2 August 2025, 2:11 pm
மன்னார்குடி அடுத்த ராமாபுரம் ஊராட்சி கூனமடை பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாரி இவருக்கு கடந்த 2018 -ம் ஆண்டு திருமணமாகியது.
இவரது கணவர் 2023-ம் ஆண்டு இறந்த பிறகு தனது 6 வயது மகன் மற்றும் 3 வயது மகளுடன் கூனமடையில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்தவர் தினேஷ் இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது. இந்நிலையில் தினேசிற்கும் சந்தோஷ்குமாரிக்கும் கள்ள உறவு
ஏற்பட்டுள்ளது.

இதனால் கர்ப்பம் அடைந்த சந்தோஷ்குமாரிக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தொடர்ந்து 25-ந் தேதி தஞ்சை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வரும் வழியில் சந்தோஷ் குமாரின் ஆண் குழந்தையை இரண்டாவது கணவர் தினேஷ் அவரது தாயார் வாசுகி மற்றும் சிலர் சேர்ந்து குழந்தையை சந்தோஷ்குமாரியிடமிருந்து வலுக்கட்டாயப்படுத்தி பிடுங்கி விற்பனை செய்ததாக சந்தோஷ்குமாரி மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் விசாரனை செய்ததில் கள்ளக்காதலன் தினேஷ் மன்னார்குடி டெப்போ ரோட்டை சேர்ந்த புரோக்கராக செயல்பட்ட வினோத் என்பவர் மூலம் ரூ 1 1/2 லட்சத்துக்கு குழந்தையை மன்னார்குடி அடுத்த ஆதிச்சபுரம் ஆர்ச் பகுதியை சேர்ந்த டாஸ்மாக் பணியாளர் ராதாகிருஷ்ணன்,
விமலா தம்பதியினருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை அடுத்து கள்ளக்காதலன் தினேஷ் அவரது தாயார் வாசுகி இடைத்தரகர் வினோத் ,குழந்தையை வாங்கிய ராதாகிருஷ்ணன் விமலா ஆகிய 5 பேரை கைது செய்து குழந்தையை மீட்டனர்.
