தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு : மருத்துவமனை கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுப்பட்ட உறவினர்கள்

24 June 2021, 7:29 pm
Quick Share

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தையை கண்காணிக்க மருத்துவர்கள் இல்லாததால் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி குழந்தை இறந்ததற்கான காரணம் கேட்டு உறவினர்கள் மருத்துவமனை கண்ணாடியை உடைத்து ரகளையில் ஈடுப்பட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா அகிலாம்பேட்டையை சேர்ந்த பூங்குழலிவிஜயகுமார் என்பவர் கருவுற்றநாளிலிருந்து மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் காண்பித்து வந்துள்ளார்.இதற்கிடையே அடுத்த மாதம் 19ம் தேதி பிரசவத்திற்கு நாள் குறிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை நடத்தும் மருத்துவர் லண்டன் சென்று திரும்பி ஒருசில தினங்களாகியுது. நேற்றுமுன்தினம் வழக்கம்போல் மருத்துவமனையில் ஆலோசனை பெற வந்துள்ளனர். இந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் வேறு ஒரு பெண் மருத்துவர் பரிசோதித்து பார்த்துவிட்டு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும் இல்லை என்றால் குழந்தைக்கு ஆபத்து என்று கூறியுள்ளார். இன்று காலை அறுவை சிகிச்சை மூலம் ஆண்குழந்தை பிறந்துள்ளது.

குறைமாதத்தில் பிறந்த குழந்தையை இன்குபேட்டரில் வைத்துள்ளனர். உரிய மருத்துவர் கண்காணிப்பு இல்லாமல் செவிலியரே குழந்தையை தூக்கிச்சென்று தாயிடம் நான்குமுறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வைத்துள்ளார். மாலை 6 மணிக்கு குழந்தைக்கு பால் கொடுக்க பட்டு செவிலியர் தூக்கி சென்ற நிலையில் இரவு 7 மணிக்கு திடீரென்று குழந்தை இறந்துவிட்டதாக செவிலியர் கூறவே அதிர்ந்துபோன பெற்றோர் நன்றாக இருந்த குழந்தை எப்படி இறந்தது, மருத்துவர் ஒருவர் அருகில் இருந்து பார்த்திருந்தால் இதுபோல் நடந்திருக்காது, மருத்துவமனையின் அலட்சியத்தால் தன் குழந்தை இறந்ததாக கூறி மருத்துவமனை வளாகத்தில் இருந்த கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர். உடனடியாக மயிலாடுதுறை போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

எப்படி குழந்தை இறந்தது என்றே தெரியவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அடுத்த மாதம் பிரசவ தேதி குறித்தும் ஏன் திடீரென்று அறுவை சிகிச்சை செய்தனர், பொறுப்புடன் கவனிப்பார்கள் என்று கருதி 50 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் பிரசவம் நடைபெற்ற பிறகு ஏன் மருத்துவரைக் கொண்டு கண்காணிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி மருத்துமனையை முற்றுகையிட்டனர். இதையறிந்து வந்த டிஎஸ்பி வசந்தராஜ் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டு, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Views: - 122

0

0