கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி: மருத்துவம் பார்த்த ஊழியர்…ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை..!!

Author: Aarthi Sivakumar
19 August 2021, 11:58 am
Quick Share

கோவை: கோவை சுந்தராபுரம் பகுதியில், இருந்து பிரசவத்திற்காக ஆம்புலன்ஸ் வாகனத்தில் சென்ற பெண்ணுக்கு ஆம்புலன்ஸிலேயே பெண் குழந்தை பிறந்தது.

கோவை மாவட்டம் சுந்தராபுரம் பகுதியில் உள்ள காமராஜர் நகர் பகுதியில், வசிக்கும் வட இந்திய பெண்ணுக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸை அழைத்தனர்.

இதனை தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சுரேஷ் மற்றும் அவசரகால மருத்துவ நிபுணர் கண்ணன், சுந்தராபுரம் பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்பொழுது பிரசவ வலியால் துடித்த பெண்ணை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.

ஆனால் அந்த பெண்ணுக்கு அங்கேயே அழகான பெண் குழந்தை பிறந்தது இதனை தொடர்ந்து தாய்க்கும் சேய்க்கும் முதலுதவி அளித்து பாதுகாப்பான முறையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர். தாயும் சேயும் நல்ல முறையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 283

0

0