ரூ.16 கோடிக்காக காத்திருக்கும் குழந்தை..! : உதவிக்காக எதிர்பார்க்கும் பெற்றோர்!

7 July 2021, 7:06 pm
Quick Share

கோவை: கோவையில் எஸ்எம்ஏ பிரச்சினையால் தவிக்கும் 6 மாத குழந்தைக்கு ரூ.16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த தமிழக முதல்வர் உதவி செய்ய வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கக.சாவடி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் – ரோமிலா தம்பதி. தினேஷ்குமார் எக்ட்டிரீசனாக பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு ஜேசன் என்ற 6 மாத ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை நாளடைவில், கால்கள் செயல் இழந்து காணப்பட்டதால், பெற்றோர்கள் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மருத்துவர் வேல்முருகனை அனுகியுள்ளனர். அவர் குழந்தையை பரிசோதனை செய்து விட்டு, அந்த குழந்தைக்கு எஸ்எம்ஏ என்ற உடலில் செல் இல்லாத குறைபாட்டை கண்டிருந்தார். இந்த குறைபாட்டை போக்க ரூ16 கோடி மதிப்பிலான ஊசி செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் உதவி கேட்டு மனு அளித்துள்ளனர். மேலும், தமிழக முதல்வர் தனிபிரிவிற்கும் மனு அனுப்பியுள்ளனர். மேலும், இதுதொடர்பாக குழந்தையின் பெற்றோர் கூறுகையில், “6 மாதமே ஆன எங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு நிலை வந்துள்ளது. எங்கள் குழந்தையை காப்பாற்ற 16 கோடி ரூபாய் ஊசி போட வேண்டிய நிலை உள்ளது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த எங்களின் குழந்தையை காப்பாற்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உதவி செய்ய வேண்டும்.
குழந்தையின் 2 வயதிற்குள் அந்த ஊசியை செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.” என்றனர்.

Views: - 91

0

0