ரிதன்யா பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்? குற்றவாளிகள் தப்ப முடியாது.. வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி!
Author: Udayachandran RadhaKrishnan9 July 2025, 12:06 pm
திருப்பூரில் திருமணமான 78 நாட்களே ஆன ரிதன்யா என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தை அதிர்வலையை ஏற்படுத்தியது.
கணவர், மாமியார், மாமனார் சித்ரவதை செய்யதாகவும், வரதட்சணை கொடுமையை குறித்து ஆடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: சத்துணவு அமைப்பாளர் தற்கொலை… அதிகாரிகளை காப்பாற்றும் திமுக அரசு? அன்புமணி டவுட்!
இது தொடர்பாக ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் சுப்பிரமணியம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், திருமணமான 78 நாட்களில் ரிதன்யா உயிரிழந்துள்ளார். வாட்ஸ் அப் மூலம் தனது தந்தைக்கு ஆடியோ அனுப்பி உள்ளார். கணவர் மாமனார் மாமியார் சித்ரவதை தாங்க முடியாது என கூறி உள்ளார். அதன்படி கணவர், மாமனார் கைது செய்யப்பட்டனர்.
ரிதன்யா பெற்றோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்ததை தொடர்ந்து மாமியார் சித்ரா தேவி கைது செய்யப்பட்டு உள்ளார். அடுத்த நாளே ஜாமீன் மனு வழங்கப்பட்டது.

இதற்கு ரிதன்யா தந்தை எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை மனு வழங்கி உள்ளார். அதனை ஏற்று ஜாமீன் மனு விசாரணை 11 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை உடற்கூறாய்வு சோதனை முடிவு வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க வாய்ப்பில்லை.
இந்த வழக்கில் தேவையான நேரத்தை காவல் துறையினர் எடுத்துக் கொள்கின்றனர். ஆர்.டி.ஓ. விசாரணை முடிவு மற்றும் உடற்கூறாய்வு முடிவுகள் வரும் போது உரிய தீர்வு கிடைக்கும்.
சந்தேக மரணம் என்ற பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆடியோ அடிப்படையில் வழக்கு மாற்றி பதிவு செய்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ளனர் என ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் சி.பி.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.