பிரபல ஹோட்டலில் இருந்து வந்த துர்நாற்றம்… விசாரணையில் ஷாக் : மீண்டும் ஆன்லைன் சூதாட்டம்.. கோவையில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 April 2023, 2:31 pm

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சப்பட்டை கிழவன் புதூரை சேர்ந்தவர் சபாநாயகம் (வயது 35 ). இவர் நேற்று அதிகாலை 2:10 மணிக்கு காந்திபுரம் செவன்த் எக்ஸ்டென்ஷன் உள்ள ராயல் காஸ்டில் இன் ஹோட்டலில் ரூம் புக் பண்ணி தங்கி இருந்ததாக தெரிகிறது.

இன்று அதிகாலை 2 மணிக்கு காலி செய்ய வேண்டியவர் தகவல் கூறும்போது அவருடைய போன் போன் சுவிட்ச் ஆப் ஆக இருந்ததாகவும் கதவு தட்டும்போது எந்த தகவலும் கிடைக்காததால் வேறு மாற்று சாவியை கொண்டு ஹோட்டல் ஊழியர்கள் திறந்து பார்த்துள்ளனர்.

அப்போது பாத்ரூம் அருகே இறந்த நிலையில் அவர் கிடந்துள்ளார். உடனே 108 ஆம்புலன்ஸ் தகவல் கூறி அவர்கள் வந்து பரிசோதித்துவிட்டு இறந்து ஐந்து மணி நேரம் ஆகிறது என்று கூறிவிட்டு சென்று விட்டார்கள்.

இது தொடர்பாக C4 காவல் நிலைய உதவிஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு மேற்படி உடலை பிரேத பரிசோதனைக்காக சிஎம்சி கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்து உயிரிழந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆன்லைன் கிரிக்கெட் சூதாட்டத்தில் ரூபாய் 90 லட்சம் வரை இழந்ததாகவும், கடன் நெருக்கடியால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கெண்டதாக கூறப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!