பெண் ஊழியரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த பேக்கரி உரிமையாளர்கள் : கோவை அருகே ‘ஷாக்‘ சம்பவம்!!

18 June 2021, 4:16 pm
Harrasment Arrest 1- Updatenews360
Quick Share

கோவை : பேக்கரியில் வேலை செய்த பெண்ணை 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூரில் ஒரு பேக்கரி கடையை கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சமீர் (வயது 25), ஷிஹாபுதீன் (வயது 27), மொய்தீன் குட்டி (வயது 40) ஆகியோர் நடத்தி வந்தனர். மூன்று பேரும் பங்காளி முறை என்பதால் அந்த பேக்கரியை உரிமையாளராக மூன்று பேரும் கவனித்து வந்தனர்.

திருச்சியை சேர்ந்த தம்பதியினர் அன்னூரில் உள்ள இவர்களுது பேக்கரியில் வேலை கேட்டு தஞ்சமடைந்துள்ளனர். அந்த தம்பதிக்கு பேக்கரி பங்காளிகள் ஒரு வீட்டை வாடகைக்கு கொடுத்தனர்.

இந்த நிலையில் கொரோனா காரணமாக பேக்கரி மூடப்பட்டது. இதனால் வேலையில்லாமல் தம்பதியினர் அவதியடைந்தனர். அவ்வப்போது அருகே ஏதாவது வேலை கிடைத்தால் தம்பதியில் யாராவது ஒருவர் வேலைக்கு சென்றுவிடுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஜுன் மாதம் 6ஆம் தேதி காலையில் கணவர் அருகே வேலை இருக்கும் காரணத்தால் சென்று விட்டார். அப்போது வீட்டில் அந்த பெண் தனியாக இருப்ப அறிந்த பேக்கரி உரிமையாளர்கள், அந்த பெண்ணை அச்சுறுத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும இது குறித்து வெளியே சொன்னால், கணவன் மனைவி இரண்டு பேரையும் கொன்று விடுவதாக மிரட்டிள்ளார். கணவனுக்கு இந்த விஷயம் தெரியகூடாது என மிரட்டியுள்ளனர்.

இந்த நிலையில் மனதுக்குள் வைத்து குமுறி குமுறி அழுத பெண், என்ன ஆனாலும் பரவாயில்லை கணவரிடம் கூறிவிட வேண்டும் என நடந்ததை நேற்று தன் கணவருக்கு கூறியுள்ளார். உடனே அந்த தம்பதி இது குறித்து துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு, மொய்தீன் குட்டியை கைது செய்துள்ளனர். எஞ்சியுள்ள இரண்டு பேர் தலைமறைவாகியுள்ளதால் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Views: - 301

0

0