தமிழக – கர்நாடக எல்லையில் சசிகலாவை வரவேற்று பேனர்கள் : அகற்றிய போலீசார்!!

7 February 2021, 8:31 pm
Banner Removed - Updatenews360
Quick Share

கிருஷ்ணகிரி : கர்நாடக எல்லையில் சசிகலாவை வரவேற்று வைக்கப்பட்ட பேனர் மற்றும் கொடிகளை அம்மாநில போலீசார் அகற்றினர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விடுதலையான சசிகலா கொரானா தொற்று காரணமாக பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தார்.

அவர் தற்போது பெங்களூர் புறநகர் பகுதியான தேவனா ஹள்ளி தனியார் விடுதியில் ஓய்வு பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் நாளை காலை தமிழகம் வருகிறார்.

நாளை கர்நாடகா மாநிலத்திலிருந்து சென்னை வரும் சசிகலாவுக்கு சிறப்பான வரவேற்பினை கொடுப் பதற்காக கர்நாடகா மாநிலம் எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சசிகலா வரவேற்புக்காக அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த பேனர் மற்றும் கொடிக் கம்பங்களை கர்நாடகா மாநில போலீசார் அகற்றி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது

Views: - 0

0

0