குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி ‘தொடர் பலாத்காரம்‘ : மனமுடைந்த மாணவி விபரீத முடிவு!!

18 September 2020, 5:34 pm
Cbe Student Suicide - updatenews360
Quick Share

கோவை : அன்னூரில் பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதால் மாணவியின் மரணத்திற்ககு காரணமான இளைஞரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த வடக்கலூர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் கோகிலவாணி. இவர் அன்னூர் அரசுப்பள்ளியில் பண்ணிரெண்டாம் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி மாணவி கோகிலவாணி வீட்டில் சானிபவுடர் குடித்து தற்கொலை செய்துகொண்டார்

முதலில் மாணவி அடிக்கடி செல்போனில் பேசியதை பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறபட்ட நிலையில் மாணவியின் தாய் ராதாமணி மகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்த வேண்டும் என அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மாணவி வசித்து வந்த அதே பகுதியில் பக்கத்து வீட்டில் குடியிருந்த கெளதம் என்ற இளைஞர் மாணவி கோகிலவானி வீட்டில் குளிப்பதை ஒருமுறை வீடியோ எடுத்து வைத்துகொண்டு தனது இச்சைக்கு இனங்குமாறு கூறியுள்ளார்
இதனையடுத்து மாணவி மறுக்கவே அடிக்கடி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார். ஒருகட்டத்தில் மனமுடைந்த மாணவி சானிபவுடர் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்துள்ளது. பக்கத்து வீட்டு இளைஞர் கவுதம் என்பவர் வீடியோ எடுத்து தனது இச்சைக்கு இனங்க கூறியதால் மாணவி சானிபவுடர் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து விசாரணை நடத்திய அன்னூர் காவல்துறையினர் கௌதமை கைது செய்து விசாரனை நடத்தி அவன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதியபட்டு சிறையில் அடைத்தனர். பெண்ணை குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டி ஆசைக்கு இணங்க வைத்த இளைஞரை கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

Views: - 11

0

0