எல்லாம் முடிஞ்சு போச்சு.. DREAM 11 உடனான உறவை முறித்துக் கொள்வதாக பிசிசிஐ அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan25 August 2025, 12:51 pm
மத்திய அரசு, ஆன்லைன் சூதாட்டத்தின் மீது கடிவாளம் போடும் வகையில் புதிய கேமிங் மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, இப்போது சட்டமாகி விட்டது! பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் கேம்களுக்கு இனி இந்தியாவில் இடமில்லை.
இந்த அதிரடி முடிவால், ட்ரீம் 11, எம்பிஎல் போன்ற பிரபல ஆன்லைன் கேமிங் தளங்கள், நிஜப் பணத்துடன் விளையாட்டுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. இந்த சட்டத்தின் அதிர்வலைகள், விளையாட்டு உலகையும் தாக்கியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சராக வலம் வந்த ட்ரீம் 11, இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்பட்டு, ஸ்பான்சர்ஷிப்பில் இருந்து விலகுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை உறுதிப்படுத்தும் வகையில், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைக்கியா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்: “ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான இந்தச் சட்டத்தை வரவேற்கிறோம். ட்ரீம் 11-உடனான உறவை முறித்துக் கொள்கிறோம். இனி, இதுபோன்ற நிறுவனங்களுடன் பிசிசிஐ எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாது!”
ஆசியக் கோப்பைக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், பிசிசிஐ புதிய ஜெர்சி ஸ்பான்சர்ஷிப் ஏலங்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம், கிரிக்கெட் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளது.
