பொறுமையா இருங்க… நல்லதே நடக்கும் : செய்தி சொல்லும் செங்கோட்டையன்!!
Author: Udayachandran RadhaKrishnan27 September 2025, 4:25 pm
சென்னை செல்வதற்காக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்பொழுது கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக செல்வதாகவும் திருமண நிகழ்ச்சி முடித்துவிட்டு நாளை அவரது சட்டமன்ற தொகுதியில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது எந்த நிலையில் உள்ளது என்ற கேள்விக்கு நீங்கள் தான் அதனை கூற வேண்டும் என பதில் அளித்தார்.
ஒன்றிணைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியது நடக்கவில்லை என்று பலரும் கூறி வருகிறார் என்ற கேள்விக்கு, பொறுத்து இருக்க வேண்டும் நல்லதே நடக்கும் என பதிலளித்தார்.
எவ்வளவு நாட்கள் பொறுத்திருக்க வேண்டும் என்ற கேள்விக்கும் பொறுத்து இருக்க வேண்டும் நல்லதே நடக்கும் என மீண்டும் பதில் அளித்து சென்றார்.
