வனத்துறை விரித்த வலையில் தானாகவே சிக்கிய கரடி : கிணற்றில் தவறி விழுந்த கரடி உயிருடன் மீட்பு!!

23 November 2020, 1:53 pm
Bear Rescue - Updatenews360
Quick Share

நெல்லை மாவட்டம் நாங்குநேரி வட்டம் சிங்கிகுளம் கிராமத்தினுள் கரடிகள் நுழைந்து அட்டகாசம் செய்து வந்தன. விளைநிலங்களுக்குள் புகுந்து அங்கிருக்கும் விளையும் பொருள்களையும் தொடர்ந்து சேதப்படுத்தின.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கரடிகள் கூட்டமாக கிராமத்தில் நுழைந்ததை அடுத்த அங்குக் கூண்டு வைக்கப்பட்டது. ஆனால், கூண்டுக்குள் கரடிகள் சிக்கிக்கொள்ளவில்லை.

தொடர்ந்து, நேற்று கிராமத்தில் நுழைந்த கரடி, வயல்வெளிகளில் உள்ள கிணற்றிற்குள் தவறி விழுந்திருப்பதை இன்று அதிகாலை பொது மக்கள் கண்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கிணற்றில் விழுந்த கரடியை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி, அதனைப் பத்திரமாக மீட்பதற்கு மருத்துவர்களும் வனத்துறை அதிகாரிகளும் செயல்பட்டு வருகின்றனர். மேலும், வலையை விரித்து மீட்கும் வழியைக் கையாளுவதற்கும் தயாராகினர்.

இதையடுத்து கிணற்றில் தத்தளித்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி பத்திரமாக மீட்டு, அவர்கள் கொண்டு வந்த கூண்டில் விட்டனர். இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது. தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த யானை 14 மணி நேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக நெல்லையில் கரடி கிணற்றில் விழுந்துள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 15

0

0