ஓரம் போ.. ஓரம் போ..குடியிருப்பு பகுதிக்குள் Cat Walk செய்த கரடி!! (வீடியோ)

21 June 2021, 6:54 pm
Bear Cat walk - Updatenews360
Quick Share

நீலகிரி : ஊரடங்கு காரணமாக வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அசால்டாக நுழையும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கொரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும், கோவை, நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் எந்த தளர்வுகள் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ஊரடங்கு காரணமாக அவ்வப்போது வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளிலும், சாலைகளில் சுற்றி வருவது வழக்கமாகி உள்ளது. இந்த நிலையில் இரவு நேரத்தில் கரடி ஊருக்கு வலம் வரும் வீடியோ வைரலாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒய்யாரமாக நடந்து வரும் கரடியை பார்த்து நாய் கத்துவதும், கரடி கிட்ட நெருங்க நெருங்க நாய் ஓடி ஒழிவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Views: - 110

0

0