Beast Vs KGF-2 : சினிமா வட்டாரமே எதிர்பார்த்த தமிழகத்தில் வசூல் சக்கரவர்த்தி யார்.?

Author: Rajesh
4 May 2022, 5:56 pm

தமிழகத்தில் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படமும் கன்னட நடிகர் யஷ் நடித்த ‘கே.ஜி.எஃப்-2’ படமும் ஒரே நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு அதிகரித்தது.

இரண்டு படங்களும் பான் இந்தியா படமாக வெளியானதால் ரசிகர்களிடையேயான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. மார்ச் 13ஆம் தேதி பீஸ்ட் வெளியான நிலையில், அதற்கு அடுத்த நாள் கேஜிஎஃப்-2 வெளியானது. இந்திய அளவில் கேஜிஎஃப்-2 வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறத. வசூல் பட்டியலில் முன்னணியில் இருந்துவந்த பல முன்னணி நாயகர்களின் பட சாதனைகளையும் இப்படம் தகர்த்து வருகிறது.

அந்த வகையில் இப்படம் உலகளவில் 1000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் இப்படத்தின் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாம். விஜய் நடித்த பீஸ்ட் படத்தைப் பொறுத்தவரை உலகளவில் சுமார் 250 கோடி ரூபாய் வசூல் குவித்துள்ளதாம்.

பீஸ்ட் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 120 கோடி ரூபாய் அளவுக்கு கலெக்சன் ஈட்டியுள்ளதாம். அந்த வகையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை யஷ்ஷின் கேஜிஎஃப்பை விட விஜய்யின் பீஸ்ட்தான் தற்போது வரை வசூலில் முன்னணியில் இருந்து வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!