சத்தமில்லாமல் விஜய் செய்த சாதனை.. யாரும் நெருங்க முடியாது போலயே..!

Author: Rajesh
23 April 2022, 12:01 pm
Quick Share

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர்களின் மிக முக்கியமானவர் தான் நடிகர் விஜய். அவரது நடிப்பில், சமீபத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலர் நடித்திருந்தனர்.

பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் கலவையான விமர்சனங்களையே அதிகமாக பெற்றது. பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் வசூல் குறைந்ததாக கூறப்படுகிது. இந்நிலையில் தான் தற்போது விஜய் தமிழ்நாட்டில் செய்துள்ள மிக பெரிய சாதனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அது, பீஸ்ட் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே முதல்முறையாக ஒரு நடிகரின் திரைப்படம் ஐந்தாவது முறையாக 100 கோடி வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய்யின்; 100 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் பின்வருமாறு..

  1. மெர்சல்
  2. சர்கார்
  3. பிகில்
  4. மாஸ்டர்
  5. பீஸ்ட்

Views: - 485

1

0