தரக்குறைவாக பேசும் நடத்துநர்களை அடியுங்கள்.. நான் பார்த்துக்கொள்கிறேன் : பெண் பயணிகளுக்கு துரைமுருகன் Support!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2021, 5:03 pm
DuraiMurugan Support -Updatenews360
Quick Share

வேலூர் : அரசு பேருந்துகளில் பெண்களை தரக்குறைவாக நடத்தும் நடத்துநர்களின் வேலையை பறித்து வீட்டுக்கு அனுப்பிவிடுவேன் என அமைச்சர் துரைமுருகன் காட்டமாக கூறியுள்ளார்.

அரசு நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்பதால் அதிகளவில் பெண்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர். இலவச பயணத்தால் டிப்போக்களில் உரிய வசூல் இலக்கை காட்ட முடியாமல் நடத்துநர்கள் எங்கோ போற மாரியாத்தா என்ற பழமொழிக்கு ஏற்ப கோபத்தை பெண் பயணிகளிடம் காட்டுகின்றனர்.

சிடு சிடுனு கோபத்தை பெண்கள் மீது நடத்துநர்கள் காண்பிப்பதால் இது குறித்த புகார் அமைச்சர் துரைமுருகன் வரை சென்றுள்ளது. இதை மனதில் வைத்த துரைமுருகன், காட்பாடி அருகே ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர், திமுக ஆட்சிக்கு வந்து 150 நாட்கள் மட்டும்தான் ஆவதாகவும், பிரசவர் நடைபெறவே 10 மாதங்கள் ஆகும் போழது 4 மாதத்தல் திமுக ஆட்சி என்ன செய்தது என யாரும் கேட்க வேண்டாம் என பேசினார்.

மேலும் பேசிய அவர் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டம் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு அளித்துள்ளதாகவும், பேருந்துகளில் பெண்களை நடத்துநர்கள் இனி தரக்குறைவாக நடத்தினால் அடியுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என காட்டமாக பேசினார்.

அரசு பேருந்து அவங்களோட அப்பன் வீட்டு சொத்து என்று நினைத்து நடத்துநர்கள் நடந்து கொள்வது சரியில்லை என்றும், இனி பெண்களை முறைத்தாலோ, தரக்குறைவாக நடத்தினாலோ புகார் வந்தால் அவர்களை வேலையை விட்டு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Views: - 319

0

1