பிச்சையெடுத்து இதுவரை ரூ.1 லட்சம் வரை நன்கொடை! ஆச்சரியம் ஏற்படுத்திய யாசகர்! !

25 August 2020, 3:38 pm
Beggar and Corona - Updatenews360
Quick Share

மதுரை : பிச்சை எடுத்து வரும் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்து வரும் யாசகர் இன்று மேலும் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கியதால் இதன் மூலம் இதுவரை 1 லட்சம் ரூபாய் வரை கொரோனா நிதியாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டியன் என்ற பிச்சைக்காரர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மதுரைக்கு வந்த அவர், நடைபாதைகளில் சாலை ஓரங்களில் தங்கியிருந்தார். இதையடுத்து தன்னார்வலர்களால் மீட்டு மதுரை மாநகராட்சி சார்பாக தங்க வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்காக தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று விரும்பிய அவர், மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை, பழ சந்தை மற்றும் பூ மார்க்கெட்டுகளில் பிச்சை எடுத்து வரும் பணத்தை மதுரை ஆட்சியரிடம் வழங்கி வருகிறார்.

இதுவரை 90 ஆயிரம் ரூபாய் நன்கொடையாக வழங்கிய யாசகர் பூல் பாண்டிக்கு ஆட்சியர் விருது வழங்கி சால்வை அணித்து கவுரவித்திருந்தார்.

இந்த நிலையில் யாசகம் பெற்று இன்று 10வது முறையாக 10 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் கொரோனா நிதிக்கு பணம் வழங்கியுள்ளார். இதன் மூலம் இதுவரை ரூ.1 லட்சத்தை கொரோனா நிதியாக கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 45

0

0