ஏற்றுமதிக்கான சிறந்த மாநிலம் : தமிழகம் 3வது இடம்!!

31 August 2020, 2:01 pm
Export TN 3rd Place- Updatenews360
Quick Share

ஏற்றுமதிக்கான அனைத்து அம்சங்களிலும் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளது.

ஏற்றுமதிக்கான அனைத்து அம்சங்களிலும் சிறந்த மாநிலங்களின் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஏற்றுமதிக்கான அனைத்து அம்சங்களிலும் சிறந்த மாநிலமாக தமிழகம் 3வது இடத்தை பிடித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், அரசு கொள்ளை, வர்த்தக நிலவரம், ஏற்றுமதி சூழல், ஏற்றுமதி செயல்பாடு ஆகிய 4 அம்சங்களை கருத்தில் கொண்டு 2020ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.

மேலும் அந்த பட்டியலில் குஜராத் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளதாக, மகாராஷ்டிரா இரண்டாவது இடத்திலும், 3வது இடத்தை தமிழ்நாடு பிடித்துள்ளதாக Niti Aayog’s Export Preparedness Index 2020 குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் தேசிய அளவில் ஆட்டோ மொபைல் ஏற்றுமதியில் 46 சதவீதம் பங்குகள் தமிழகம் கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, எலக்ட்ரானிக் மற்றும் ஆடை ஏற்றுமதியில் 19 சதவீத பங்கையும் தமிழகம் கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Views: - 5

0

0