தமிழகத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும் : ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் எச்சரிக்கை!!

27 October 2020, 12:52 pm
Srivilli Jeeyar - Updatenews360
Quick Share

விருதுநகர் : பெண்களை இழிவாக பேசிய திருமாவளவனை கைது செய்து தண்டனை தராவிட்டால் மிகப் பெரிய போராட்டம் வெடிக்கும் என ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீபத்தில் பெண்களை இழிவாக பேசி விசக தலைவர் திருமாவளவன் வீடியோ வெளியிட்டிருந்தார். இதற்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் உள்ள இந்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியது. திருமாவளவனுக்கு எதிராக அரசியல் கட்சியினர் எதிர்ப்புகள் தெரிவித்து கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் சடகோப ராமானுஜர் ஜீயர் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சம்பவம் குறித்து பேசிய அவர், பெண்களை தரக்குறைவாக பேசும் விரோதிகள் தற்போது அதிகமாகிவிட்டனர். வரும் தேர்தலில் இவர்களை போன் இந்து சமுதாய விரோதிகளுக்கு ஓட்டு போடக்கூடாது என கேட்டுகொண்டார்.

மேலும் ஆண்டாள் கூறியது போல, கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் என இந்துக்கள் ஒன்று சேர்ந்தால் இது போன்ற பேசக்கூடிய விரோதிகளை வென்று விடலாம் வெற்றிக்கொள்ளலாம் என கூறினார்.

இந்த மாதிரி தேசத்துரோகிகளை கூட்டணி கட்சியில் சேர்ப்பதை விட தவிர்க்க வேண்டும் என்றும், திருமாவளவனை கைது செய்து தண்டனை தராவிட்டால், பெண்கள், சமுதாய தலைவர்கள், இந்து மத தலைவர்கள், துறவியகர்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை விடுத்தார்.

Views: - 30

0

0