சோறு வடிக்கும் போது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. இப்படியும் உயிரிழப்பா?

Author: Hariharasudhan
21 November 2024, 12:41 pm

திருவள்ளூரில் சோறு வடிக்கும்போது வடிகஞ்சி கொட்டியதால் சிகிச்சை பெற்று வந்த வடமாநில சிறுமி உயிரிழந்து உள்ளார்.

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் உள்ள சிப்காட் தொழிற்சாலையில் பல்வேறு வடமாநிலத்தவர்கள் குடும்பமாக தங்கி வேலை பார்த்து வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரவிதாஸ் என்பவர் சிப்காட் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மகள் நந்தினி. 16 வயதான இவர், கடந்த நவம்பர் 14ஆம் தேதி வீட்டில் ஸ்டவ் அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்து உள்ளார். அப்போது பாத்திரத்தில் வைத்த சோற்றை வடிப்பதற்கான செயலில் நந்தினி ஈடுபட்டு உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வடிகஞ்சி நந்தினி உடல் மீது பட்டு உள்ளது.

DEATH REPRESENTATION IMAGE

இதனால் ஏற்பட்ட வலியால் அவர் அலறி துடித்துக் கொண்டு இருந்து உள்ளார். பின்னர், நந்தினியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தொடர்ந்து, அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்து உள்ளார்.

இதையும் படிங்க: பாலியல் அத்துமீறல் செய்த அரசுப் பேருந்து நடத்துனர்.. தர்மடியால் நிலைகுலைந்த நிலையில் மீட்பு!

இவ்வாறு ஒரு வாரமாக தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நந்தினி, நேற்று (நவ.20) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!