அதிவேகமாக வந்த பைக்.. லாரியின் முன்பக்க டயர் மீது மோதி கோர விபத்து : பதைபதைக்க வைத்த காட்சி!!

Author: Udayachandran
29 July 2021, 6:41 pm
Accident -Updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் தாராபுரம் சாலையில் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக சென்ற பைக் எதிரே வந்த தண்ணி லாரி மீது மோதிய விபத்தில் வாலிபர் பலியான நிலையில் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாராபுரம் சாலையில் இன்று காலை தாராபுரத்தில் இருந்து பல்லடம் நோக்கி அதிவேகமாக சென்ற மோட்டார் பைக் விவேகானந்தா பள்ளி அருகே வளைவில் திரும்பியபோது எதிரே வந்த தண்ணீர் லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த வாலிபரை மீட்ட அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு அவரது உடலை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் அந்த வாலிபர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் திருச்சி வெங்கூரைச் சேர்ந்த சேது என்பவரது மகன் பூபதி (வயது 23) என்பதும் அவர் தனது சொந்த ஊரான திருச்சியில் இருந்து பல்லடம் வழியே கோவை நோக்கிச் சென்ற பொழுது அதிவேகமாக சென்றதில் பைக் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து திரும்பிய தண்ணி லாரி மீது மோதி விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 353

2

0