பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவுமா..? சுகாதாரத்துறை செயலர் அதிர்ச்சி தகவல்..!!

5 January 2021, 4:20 pm
radhakrishnan - updatenews360
Quick Share

சென்னை : கேரளாவில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சல், மனிதர்களுக்கு பரவும் அபாயம் இருக்கிறதா..? என்பது குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 100% இருக்கைகளோடு தியேட்டர்கள் திறப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து வருவாய்த்துறையிடம் ஆலோசிக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள குளிர்சாதன சேமிப்பு வசதி கொண்ட கொரொனா தடுப்பூசி சேமித்து வைக்கும் அறையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தடுப்பூசிகள் வரும்போது தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறோம். தடுப்பூசிகளை சேமித்து வைப்பதற்கு தமிழகம் முழுவதும் 51 கிடங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சேமிப்பு கிடங்குகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இங்கிலாந்திலிருந்து வருகை தந்த 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 12 பேரின் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் 4 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பறவை காய்ச்சல் தமிழகத்திற்கு வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பறவை காய்ச்சல் நேரடியாக கால்நடைக்கு பாதிக்கப்பட்டாலும் இதனை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம்.பறவைக்காய்ச்சல் மனிதர்களுக்கு வரலாம் சுகாதாரத்துறை சார்பாக 6 மாவட்ட எல்லைகளில் 26 சோதனை சுவடி அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து கால்நடைகள் வரும் போது சோதனை நடத்தப்படும். மேலும், மழைக்காலத்திற்கு பிறகு டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள தனியார் விடுதிகளில் பரிசோதனை நடத்தியதில் 2.7 % கீழ் தான் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்கள். மக்கள் கூடும் இடங்களில் தொடர்ந்து பரிசோதனை எடுத்து வருகிறோம்,தேவையற்ற பதட்டம் வேண்டாம்.

வழிகாட்டு நெறிமுறைகளின் படிதான் தியேட்டர்கள் 100% இருக்கைகளோடு செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. 100% இருக்கைகளோடு தியேட்டர்கள் திறப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறித்து வருவாய்த்துறையிடம் ஆலோசிக்கப்படும், எனக் கூறினார்.

Views: - 18

0

0