மறைந்த முதலமைச்சர் ஜெ.,வின் பிறந்தநாள் : எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் தலைமையில் பேரணி!!!

24 February 2021, 4:16 pm
ammna Arjunan- Updatenews360
Quick Share

கோவை : மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கலந்து கொண்ட மாபெரும் எழுச்சிப் பேரணி நடைபெற்றது.

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் 73வது பிறந்த நாள் விழா உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்களின் வழிகாட்டுதலின்படி கோவை மாநகர் மாவட்டத்தின் சார்பாக தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது.

இந்த பிறந்தநாள் விழாவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கோவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகமாக, இதய தெய்வம் மாளிகையிலிருந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவ படத்தை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.

மேலும் கோவை அவிநாசி சாலையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர், மற்றும் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலையிட்டு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருப்பெயரால் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மேலும் கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப்படத்திற்கு கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் மலர்தூவி மரியாதை செய்தனர்.

அதேபோல் தெற்கு சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் திருவுருவப் படத்திற்கு சட்டமன்ற உறுப்பினரும் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்த விழாவில் முன்னாள் மேயர் செ.மா வேலுச்சாமி, சிறுபான்மையினர் பிரிவு மாநில துணை செயலாளர் சி. டி. சி. ஜபார், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் கே. ஆர். ஜெயராமன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பிராபகரன் உட்பட கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டார்கள்.

Views: - 6

0

0