என் மகனுக்கே 52 வயசு..முன்னாள் அமைச்சருக்கு பர்த்டே.. அடடே வேட்பாளருக்கும் பர்த்டே : பிரச்சாரத்தில் சுவாரஸ்யம்!

Author: Udayachandran RadhaKrishnan
1 April 2024, 7:57 pm

என் மகனுக்கே 52 வயசு..முன்னாள் அமைச்சருக்கு பர்த்டே.. அடடே வேட்பாளருக்கும் பர்த்டே : பிரச்சாரத்தில் சுவராஸ்யம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதிக்கு உட்பட்ட முளையூர், உலுப்பகுடி, மூங்கில்பட்டி, கோமணாம்பட்டி, வத்திபட்டி மற்றும் பரளிபுதூர் ஆகிய ஊர்களில் அதிமுக கூட்டணி கட்சியான எஸ்டிபிஐ கட்சி வேட்பாளர் முகமது முபாரக்கை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் கழக துணைப் பொதுச் செயலாளர் நத்தம் விசுவநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக முளையூரில் உள்ள நல்லஅரவான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பின் போது பேசிய முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் இன்று பிறந்தநாள் காணும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அவர்களுக்கும், திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் முகமது முபாரக் ஆகிய இருவருக்கும் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

பின்னர் பேசிய திண்டுக்கல் சீனிவாசன் எனது பிறந்தநாள் அன்று பிறந்தநாள் காணும் வேட்பாளருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று கூறினார் அதன் பின்னர் பேசிய வேட்பாளர் திண்டுக்கல் சீனிவாசன் அப்பா அவர்களுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து பொதுமக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!