பிரியாணி ஜிஹாத்.. பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலந்து விற்பனை? வெளியான வதந்தி : விசாரணையில் இறங்கிய போலீசார்!

Author: Udayachandran RadhaKrishnan
23 May 2023, 1:25 pm

கோவையில் பிரியாணி கடையில் இந்துக்களுக்கு வழங்கப்படும் பிரியாணியில் கருத்தடை மாத்திரை கலப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதை தொடர்ந்து மாநகர சைபர் கிரைமில் வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவை மாநகர் சைபர் கிரைம் காவல்துறையினர் சமூக வலைதளமான twitter கணக்கை ஆராய்ந்த போது ஒரு தனியார் ட்விட்டர் கணக்கில் கோவையில் பிரியாணி கடையில் கருத்தடை மாத்திரை கலந்து இந்துக்களுக்கு விற்பனை, முஸ்லிம்களுக்கு கருத்தடை மாத்திரை கலக்காத பிரியாணி விற்பனை என்று ஒரு பதிவு இருந்துள்ளது.

இதனையடுத்து அந்த ட்விட்டர் கணக்கில் அந்த பதிவினை செய்தவர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!