மழை வேண்டி வழிபாடு….ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் விநோத கிடா விருந்து!!!

Author: Aarthi
4 October 2020, 11:05 am
athapuram virunthu - updatenews360
Quick Share

கமுதி அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழாவில், 50க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு விநோதமான முறையில் நேர்த்திக்கடன் நிறைவேற்றப்பட்டது.

இராமாநதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் 3 தலைமுறைகளுக்கும் மேலாக, எல்லை பிடாரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அந்தவகையில், இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் 2வது வாரத்தில் விவசாயத்தில் நல்ல மகசூலை வேண்டியம், மழைவேண்டியும் திருவிழா நடைபெற்றது.

திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட ஆடுகள் நேர்த்திக்கடனாக பலியடப்பட்டன. இந்த விநோத வழிபாட்டில் 1000க்கும் மேற்பட்ட ஆண்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

Views: - 58

0

0